வாய் துடுக்காக பேசிய உக்ரைன் அதிபர்! ஒரே குரலில் அடக்கிய ஜோ பைடன்!

0
88

நேச நாடுகள் கூட்டமைப்பில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் இறங்கியதால் அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக போர் தொடுத்தது உக்ரைன் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று அமெரிக்கா நேரடியாகவே மிரட்டல்விடுத்தது.

ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு போரில் குதித்தது. ரஷ்யா அப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், பல கண்டன அறிக்கைகளை வெளியிட்டதுடன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொண்டார். இது உக்ரைனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியது இதனை புரிந்து கொண்ட அமெரிக்க உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வந்தது இன்னமும் இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

இதற்கு நடுவே போர் உச்சகட்டத்தில் இருந்த போது உக்ரைன் அதிபர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் நேசநாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும்போது களத்தில் இறங்காமல் வேடிக்கை பார்ப்பது சரியல்ல என்ற பாணியில் உக்ரைன் அதிபர் பேசி வந்தார். இது அமெரிக்ஹ்காவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதனால் உக்கரை அதிபர் மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் வெளியுறவு கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதால் உக்ரைனுக்கு தொடர்ந்து பல பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை ஜோபைடன் வழங்கி வந்தார். அப்போதும் கூட ஊக்கரைன் அதிபர் தெனாவட்டாக பேசுவதை நிறுத்தவில்லை. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் கடந்த ஜூன் மாதம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக சொல்லப்படுகிறது.

உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை அந்த நாட்டு அதிபர் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார். அதோடு மளிகை கடைக்காரரிடம் பொருட்கள் பட்டியலை கொடுத்துவிட்டு சொல்வது போல இந்த ஆயுதங்களை எல்லாம் முரணாக அனுப்பி வைத்து விடுங்கள் என்று ஜோ பைடனிடம் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

அதோடு கடந்த முறை கேட்ட ஆயுதங்கள் அனைத்தும் இன்னும் வந்து சேரவில்லையே என்று அவர் கேட்டிருக்கிறார். அவருடைய பேச்சில் தெனாவட்டான பாணி தென்படுவதை உணர்ந்து கொண்ட ஜோபைடன் கோபத்தில் சட்டென்று குரலை உயர்த்தி மிரட்டும் விதத்தில் பேசியதாக என் சி பி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

எங்களால் முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்து கொண்டு தான் இருக்கின்றோம் கொஞ்சமாவது நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் என்று அமெரிக்க அதிபர் குரலை உயர்த்தி தெரிவித்திருக்கிறார் அதுவரையில் ஜோபாயுடன் இப்படி கோபமாக பேசுவதை பார்த்திராத உக்ரைன் அதிபரின் சர்வ நாடியும் அடங்கிவிட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திலேயே வீடியோவை வெளியிட்ட ஜெலன்ஸ்கி உக்ரைனுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவிகளை மறக்க முடியாது. இந்த தருணத்தில் அமெரிக்காவிற்கு நன்றி கூற உக்ரைன் கடமைப் பட்டிருக்கிறது என்று பேசி ஜோ பைடனை சமாதானம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.