அந்த நாட்டுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது! மறுபடியும் அங்கு செல்வேன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

0
102

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி திடீரென்று முன்னறிவிப்பின்றி போர் தொடுத்தது, இந்த போர் தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. 3 மாதங்களை கடந்து இந்த போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்கா இதனை எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்திருப்பதாவது ,அமெரிக்கா இந்தியநாட்டிற்காக எப்போதும் இருக்கும் ஆனால் அமெரிக்காவிற்கு முன்பே பல காலங்களாக இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நல்லுறவில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவுடனான உறவு தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பதாவது, ஏற்கனவே 2 முறை இந்தியாவிற்கு சென்றிருக்கிறேன், மறுபடியும் செல்வேன் அந்த நாட்டுடன் தனக்கு நல்லுறவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.