புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலை வாய்ப்பு!

0
82

சென்ற வருடம் மட்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக IRENA என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன் என் தகடுகள் மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. மனித செயல்பாடுகளின் காரணமாக பூமியின் வெப்பமயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் பேராபத்தை சந்திக்கும் நிலை உண்டாகியுள்ளது. பாரிஸ் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நூற்றாண்டுக்குள் உலக வெப்ப நிலையை 2 சென்டிகிரேட் அல்லது 1.5 சென்டிகிரேட் அளவுகோல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பு விபரங்கள்

சென்ற ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் 1 கோடியே 27 இலட்சம் நபர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியாவில் மட்டும் ஏற்படுத்தப்பட்டதாகவும் சீனாவின் பங்கு மட்டும் 42 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை வேலைவாய்ப்பு வளர்ச்சியில் சூரிய மின் ஆற்றலின் பங்கு அதிகரித்து வருகிறது.

ஏற்படுத்தப்பட்ட மொத்த வேலைவாய்ப்பில் 43 லட்சம் பேர் சூரிய மின் தகடு மின்சார உற்பத்தியில் பணியாமத்தப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் காற்று மின்சாரம் துறையிலும், 24 லட்சம் பேர் நீர்மின் உற்பத்தியிலும், 24 லட்சம் பேர் உயிரி எரிபொருள் துறையின் கீழும் பணியமறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த வருடத்தில் 8,6300 பேர் இந்த துறையின் கீழ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சூரிய மின்னாற்றல் துறையின் கீழ் பணியமறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதோடு 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எறிசக்தியின் மூலமாக மின்சார உற்பத்தியை 500 ஜிகா வாட் இலக்கை அடைய வேண்டுமென்றால் 34 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை இந்தியா உண்டாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.