ஓமன் நாட்டில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஐடிஐ படித்தவர்களா நீங்கள் அப்படியானால் உடனே விண்ணப்பியுங்கள்!

0
75

ஓமன் நாட்டில் பணியாற்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்த ஆண் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் விபரங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் முனைவர் சி என் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பை பற்றி தெரிவித்திருக்கிறார்.

ஓமன் நாட்டில் casting, inspection, machine operator பணிக்கு இரண்டு வருடம் பணி அனுபவம் உள்ள 22 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் எடைக்கு மேல் இருப்பவர்கள் மற்றும் 165 சென்டிமீட்டருக்கு மேல் உயரம் உள்ள டிப்ளமோ எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் ஐடிஐ, ஃபிட்டர், டர்னர், வெல்டர், படித்த ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக 35,000 ரூபாய் மற்றும் உணவு இருப்பிடம் விமான பயணச்சீட்டு வெளியிட்டவை ஓமன் நாட்டில் வேலை வழங்குபவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு ஓமன் நாட்டிற்கு செல்வதற்கு விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.com / regformmew/itiformphp என்ற இணையதளத்தில் இணைப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு முனைவர் சி என் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரும் கிடையாது. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஓமன் நாட்டிற்கு பணிபுரிய செல்பவர்கள் விசா கிடைத்த பிறகு இந்த நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக 35,400 மட்டும் வரைவோலை மூலமாக கட்டினால் போதும் வேறு எந்த ஒரு கட்டணமும் தேவையில்லை என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.