ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி: அறிமுகப்படுத்தியது ஜியோ நிறுவனம்!

0
68

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43ஆவது பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.அதில் ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் ரியாலிட்டி கிளாசை அறிமுகம் செய்துள்ளது.இந்த கண்ணாடியில் உள்ள கேபிள் உதவியுடன் இதனை ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த ஜியோ ஸ்மார்ட் கண்ணாடி ஆனது 75 கிராம் எடை கொண்டது.இந்த கண்ணாடி ரியாலிட்டி அனுபவத்தை வழங்கும் என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஜியோ கண்ணாடி நிறைய கிராபிக்ஸ் வேலைப்பாடுகளை கொண்டுள்ளது.மேலும் இது சிறந்த காட்சி அனுபவத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் டெமோ காண்பிக்கப்பட்டது.இது மூலம் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களுடன் பேசவும் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.இதில் 3D
ஹலோகிராபிக் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.இந்த அழைப்பு மூலமாக உங்களை 3D வடிவத்தில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஜியோ கிளாஸ் அதிக ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி ஆனது 25 பயன்பாடுகளை உள்ளடக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Parthipan K