ஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு – அதிர்ச்சியில் பா.ஜ.க ?

0
71

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பபதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து கோலோச்சிவந்த பாரதிய ஜனதா கட்சி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், 15 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்துவந்த பா.ஜ.க, ஆட்சியை இழந்தது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். உச்சக்கட்டமாக, மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியை இழந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது.

சமீபத்தில், சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருந்துவந்தது. அங்கு, ஐந்து கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மாநிலத்தில் , தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கும் என்று கூறுகின்றன.

author avatar
Parthipan K