ஆந்திராவில் நல்ல திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி? நிறுவனங்களின் புது கணக்கு!

0
92

ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்தது வருகிறார். அவற்றில் ஒன்று தான் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை அந்தந்த நிறுவனங்கள் இருக்கும் பகுதி மக்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டம் ஆகும். இதனால் பெரிய நிறுவனங்கள் இடம்பெயர யோசித்து வருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை, தனியார் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க புதிய அமர்வு, மேலும் தனியார் நிறுவனங்களின் 75 சதவீத வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் ஆகும்.

இவற்றில் 75 சதவீத தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை உள்ளூர் மக்களுக்கே என்பது நிறுவனங்களிடம் சற்று கவலையை அளிக்கிறது. ஏனென்றால் பெரிய பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு தகுதியானவர்களை நாடு முழுவதும் பல தகுதி தேர்வுகளை வைத்து தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால் நிறுவனம் தங்களின் வளர்ச்சியை எளிமையாக அதிகரிக்கின்றன. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி – யின் சட்டம் உள்ளூர் மக்களுக்கே 75 சதவீதம் வேலை என்பது தகுதியானவர்கள் விட உள்ளூர் மக்களுக்கே அதிகமாக இருக்க கூடும் இதனால் நிறுவன வர்த்தகம் பாதிப்படையும் என கருதுகின்றனர்.

ஆனால் தமிழகதில் அதற்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் ஜெகன் மோகன் ரெட்டி 75 சதவீதம் வேலை உள்ளூர் மக்களுக்கே என்பது நல்ல விசியம் ஆனால் இதை தமிழகம் 80 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்கள் என்ன செய்யும் என தெரிய வில்லை.

ஆனால் அந்த நிறுவனங்கள் தமிழகத்திற்கு மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் ஆந்திர மாநிலத்தை விட நிறுவனங்கள் அமைக்க ஏற்ற சூழல் உள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரிய பெரிய நிறுவனங்களின் பட்டியல் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K