இனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்..!! மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு!

0
65

JEE தேர்வுகள் அனைத்தும் இனி அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் IIT, NIT போன்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு JEE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால், JEE நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், JEE தேர்வுகள் அனைத்தும் இனி அந்தந்த மாநில மொழிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

https://twitter.com/DrRPNishank/status/1319218818888069122?s=20

https://twitter.com/DrRPNishank/status/1319218820867739650?s=20

இனிவரும் காலங்களில் JEE தேர்வுகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடைவர் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K