ஸ்டாலினை பங்கம் செய்த ஜெயக்குமார்! கடும் விரக்தியில் திமுக தலைமை!

0
51

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு இந்த வருடமே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் சிக்னல் பக்கத்தில் இருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பாக, அமைச்சர்கள் பாண்டியராஜன் ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் , போன்ற அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு பள்ளியில் கல்வி கற்றவர் எனவும் ஆகவே மாணவர்களின் கஷ்ட நஷ்டம் என்ன என்பது அவருக்கு தெரியும் என்றும் தெரிவித்திருக்கிறார் .

சமூக நீதிக்கான மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது ஆகவே அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசிற்கு இருக்கும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்தி அரசியலமைப்புச் சட்டம் 162 வது பிரிவின்படி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்த அவர் இதில் எந்த ஒரு குளறுபடியும் வராது என்றும் தெரிவித்திருந்தார் தொடர்ச்சியாக பேசிய அவர் சென்னையில் 2014 ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது அதை ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டாரா எனும் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

தமிழக அரசு 2014 ஆம் ஆண்டு மழையின் போது நடந்ததை போல எதிர்காலத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது வடிகால் வாரியம் மூலமாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு மண்டலத்திலும் மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது முப்பத்தி ஒன்பது படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன எனவும் 44 நடமாடும் மருத்துவக் குழுக்கள் எந்நேரமும்
தயார் நிலையில் இருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.