ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

0
59

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார்.

கவிஞர் பாரதியார் உடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது ஜெயலலிதா ஆட்சியில்தான் இது நடந்து இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர்.

பொதுமக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு மக்களோடு மக்களாக இருப்பவர்கள் தான் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகியோர் திமுகவின் ஆட்சி காலத்தில் மேடையில் பேச இயலாத சூழ்நிலை இருந்து வந்தது. கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவ்வளவு தாக்குதல்களையும் கடந்து எம்.ஜி.ஆர் எத்தனை துன்பங்கள் வந்தாலும் நினைத்ததை சாதிப்பேன் என்று சூளுரைத்து இருந்தார்.

பொதுவாழ்வில் இருக்கின்ற மக்கள் தலைவர்களுக்கு உயிர் பயம் மற்றும் அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடாது ஆனாலும் கடந்த எட்டு மாத காலமாக வீட்டிலேயே முடங்கி இருந்து விட்டு வெளியே வராமல் வாக்குகளுக்காக வெளியே வந்து இருக்கிறார்கள் என்று சொல்லும்போது, இது எவ்வாறான சந்தர்ப்பவாதம் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த எட்டு மாதங்களில் முதல்வர் பழனிசாமி உயிரை கூட பணயம் வைத்து பணியாற்றியிருக்கின்றார் என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.