“பூம்ரா இன்னும் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிவிடவில்லை…” கங்குலி பதில்!

0
74

“பூம்ரா இன்னும் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிவிடவில்லை…” கங்குலி பதில்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார்.

இதையடுத்து பூம்ரா டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்னும் 6 மாத காலத்துக்கு அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் சிகிச்சை மற்றும் ஓய்வு அவருக்கு தேவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இனிமேல் பூம்ரா அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி “பூம்ரா இன்னும் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடவில்லை. அவர் அணியோடு ஆஸ்திரேலியா செல்வரா மாட்டாரா என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும்” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை தந்துள்ளது.