120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

0
88

120 பெண்களிடம் சில்மிஷம் செய்த ஜிலேபி பாபா! நீதிமன்ற அதிரடி தீர்ப்பு!

120 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஜிலேபி பாபா என நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சாமியார் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் என்ற கோவிலின் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்கிற ஜிலேபி பாபா. இவர் சாமியாராக மாறுவதற்கு முன்பு அமர்வீர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் மான்சாவிலிருந்து அரியானா மாநிலம் தொஹானாவிற்கு வந்தார். தோஹானாவின் ரயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால் இவருக்கு ஜிலேபி பாபா என்று அடைமொழி உருவானது.  இவரது மனைவி இறந்த பின்பு அமர் பில்லி சூனியம் போன்ற செய்வினை தொழில்களை ஆரம்பித்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தொஹானாவிற்கு வந்து அன்று முதல் பெண்களை  அவரது வலையில் சிக்க வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவர் மீது காவல் நிலையத்தில் பல பெண்கள் கொடுத்த பாலியல்  புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார். அவரது குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு பெண்களை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பற்றி போலீசார் கூறுகையில் ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பு போதை வஸ்துகளை கொடுத்து அவரை சுயநினைவை இழக்க செய்வார். அதாவது அவர்கள் மீது ஆவி புகுந்திருப்பதாக கூறி பயத்தின் காரணமாக  சுய விருப்பத்துடன் சூனிய பூஜைகளில் கலந்து கொள்ளச் செய்கிறார். பின்னர் நடைபெறும் தந்திர வித்யா பூஜைகளின் போது அவர்களை மயக்கமடைய செய்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்து நிறைய பெண்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்ததோடு மட்டுமில்லாமல் வீடியோவை இணையதளத்தில் கசிய விடுவதாக கூறி பல்வேறு பெண்களை தேவைப்படும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வந்தார்.

ஜிலேபி பாபா ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட போது 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரின் அறையில் இருந்து பல்வேறு போதை மாத்திரைகள் போதை வஸ்துகள் மற்றும் பூஜை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இவர் மீது பதேஹாபாத்  நீதிமன்றத்தில் பல்வேறு பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதன் அடிப்படையில் ஜிலேபி பாபாவை குற்றவாளி என அரியானா மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.