அறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸிவால்!! இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவின் நிலை என்ன!!

0
30

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸிவால்!! இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவின் நிலை என்ன!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் முதல் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸிவால் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஜூலை 12ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இன்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இன்டீஸ் அணியில் அதிகபட்சமாக அலிக் அதனசே 47 ரன்கள் எடுத்தார். இந்தியாவில் பந்துவீச்சில் அஷ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

இதையடுத்து 150 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமாகி தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸிவால் சதம் அடித்து சாதனை படைத்தார்.

 

இந்தியாவில் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸிவால் சதம் அடித்து 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்கவீரர் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். விராட் கோஹ்லி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

 

வெஸ்ட் இன்டீஸ் அணியில் பந்துவீச்சில் அலிக் அதனசெ,  வாரிக்கன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இந்தியா முதல் இன்னிங்ஸில் தற்போது வரை 162 ரன்கள் முன்னிலையில் உள்ளது.