‘ஜெய்பீம்’ மூலம் சூர்யாக்கு வந்த புதிய சிக்கல்- “மன்னிப்பு கேட்க வேண்டும் ” வன்னியர் சங்கம்

0
75
Jaibhim movie caught in controversial issue

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்; சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த கதைக்களம் நீதி அரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு ஆட்கொணர்வு மனு வழக்குபற்றி பின்புலமான கதை.

1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடப்பதை போன்ற கதையம்சம் கொண்டது.

பட்டியல் இனத்தோரின் வாழ்க்கை முறை, லாக்கப் டெத் என மனதை உலுக்கும் காட்சிகளை கொண்ட திரைப்படம்.

வழக்கறிஞர் சந்துருவாக நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

ரசிகர்கள் மட்டுமின்றி பல துறை பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் இந்த திரைப்படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் வந்துள்ளது.

அதாவது, அந்த திரைப்படத்தின் காவலராக வரும் நபரை வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் போல் காட்டியிருப்பதாகவும், வன்னியர்கள் என்றாலே கெட்டவர்கள் போல் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே அதிலுள்ள குறிப்பிட்ட காட்சிகளை நீக்கி, வன்னியர் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னியர் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

 

 

 

 

 

author avatar
Parthipan K