விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க பாட்டாளி மக்கள் கட்சியை வீழ்த்த திமுக விடுதலைச் சிறுத்தைகளை பயன்படுத்தியது அம்பலமாகிவிட்டது, தலித் பகுதியில் பாமகவினரை ஓட்டு கேட்க விடாமல் அக்கட்சியின மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின் உத்தரவின் பேரில் சிறப்பாக செயலாற்றியது,

அதிமுகவை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கூட தலித் பகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகள் பாமகவிற்கு விழவில்லை இதன் காரணமாகவே அக்கட்சி செல்வாக்கு மிக்க இடங்களான விழுப்புரம்,கடலூர், அரக்கோணம்,தர்மபுரி, ஸ்ரீபெரும்புதூர் போன்ற வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாளுமன்ற தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற முடியவில்லை,

இதற்கு முக்கிய காரணம் பாட்டாளி மக்கள் கட்சியை தலித் மக்களுக்கு எதிரானது போன்றன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இக்கட்சி செய்யும் அட்டூழியங்களை, பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியும் எதிர்த்தும் சிம்மசொப்பனமாக நிற்பதால், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பாமகவை ஓட்டு கேட்க தங்கள் பகுதிக்கு விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர், ஏன் மாவட்ட அமைச்சர்களான சிவி சண்முகம் m.c. சம்பத் போன்ற வன்னிய அமைச்சர்கள் இருக்கும்போதே இந்த நிலைமைதான்.

இதற்கு பின்னால் நின்று செயலாற்றியது திமுக தான் என்பது ஜெகத்ரட்சகன் மற்றும் திருமாவளவன் இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோவில் ஜெகத்ரட்சகன் தான் அதிகம் பேசினார் அவர் பேசியது பின்வருமாறு,

தமிழ்நாட்டில் திருமாவளவன் கட்சி இல்லை என்றால் நாங்க வந்து அதாவது வட மாவட்டங்களில்(வன்னியர்கள்) நாங்கள் இருக்கும் இடங்களில் ஒரு காலனியில் கூட மாம்பழம் வரையப்படவில்லை, ஓட்டு கேட்க உள்ளே விடவில்லை எல்லா காலணியிலும் எனக்கு ஓட்டு விழுந்து உள்ளதால் தான் வெற்றி பெற்றேன், அத்தனையும் காலணி(தலித்) ஓட்டுதான் எனக்கு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஒரு இடத்தில் கூட மாம்பழம் வரையவிடப்படவில்லை, அப்புறம் ஒரு இடத்தில் நைட்ல போயி மாம்பழம் வரைந்துள்ளனர், மறுநாள் காலையில் மாம்பழம் சின்னம் மீது சாணியை வீசிச் இருக்கிறார்கள், இதுபோல நான் பார்க்கவில்லை.

எல்லா ஊர்களிலும் இதே தான் காலனியில் 646 ஓட்டுகளில் 642 ஓட்டுகள் எனக்கு விழுந்துள்ளது மீதி ஓட்டுகள் தெரியாமல் மாற்றி போட்டதால் என்னவோ தெரியவில்லை, வெறி பிடித்துப் போய் வேலை செய்தார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வடமாவட்டங்களில் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது முடியாது என்று ஆனந்தத்துடன் வீடியோ உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களின் எதிர்ப்பு மிக பலமாக திமுக சம்பாதித்து உள்ளதால் ஜெகத்ரட்சகனை தேர்தல் பொறுப்பாளராக நியமித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஆடியோ விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்களிடையே பரவலாக வைரலாகி வருகிறது, பாமகவினர் இந்த வீடியோவை அனைத்து தரப்பு மக்களிடமும் காட்டி அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர்,

இந்த விஷயம் வெளியே தெரியவே ஜெகத்ரட்சகன் ஆடி போயுள்ளார், கலக்கத்தில் உள்ளார் என்ன செய்வது தெரியாமல் பொன்முடியும் அதிருப்தியில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களின் பார்வைக்காக அந்த வீடியோ லிங்க் கீழே. வீடியோ பிடித்திருந்தால் எங்களது YouTube சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Copy
WhatsApp chat