கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!

0
243
Jackpot for wedding couples.. Marriage allowance increased dramatically!! Crazy announcement!!
Jackpot for wedding couples.. Marriage allowance increased dramatically!! Crazy announcement!!

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருடம் தோறும் ஏழை எளிய தம்பதியினருக்கு கோவில் சார்பாக திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்பொழுது இதன் அடிப்படையில் நடத்தப்படும் திருமணத்திற்கு செலவின தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாணையில் ஒரு ஜோடிக்கு திருமண செலவாக ஒரு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கினர்.இவ்வாறு வழங்கியதுடன் ஒரு மண்டலத்தின் 25 ஜோடிகளுக்கு திருமணம் என்ற வகையில் 20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்.

இவர்களின் திருமண செலவானது திருக்கோவில்களிலிருந்து பெறப்படும் நிதி மூலம் பெறப்படும் என்று தமிழக அரசு கூறிய நிலையில், ஒரு கோடி ரூபாயை இதற்கென்று திருக்கோவில்கள் மூலம் ஒதுக்கப்பட்டது.

தற்பொழுது 283 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதில் திருமணத்தின் செலவு தொகையாக ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50,000 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது.

அந்த வகையில் நான்கு கிராம் அளவில் தங்கம்  மணமகன் ஆடைரூ.1000, மணமகள் ஆடை ரூ.2000, உணவு சீர்வரிசையாக பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மிக்சி,பூஜை பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கி இத்திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்து சமய அறநிலைதுணை ஆணையர் திருமண செலவின தொகையை உயர்த்தி தரக்கோரி கோரிக்கை வைத்ததன் பேரில் இந்த அரசாணை வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.