ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!

0
82

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!

ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சனை இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில்  தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி  இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் இருந்தால், தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி மூலம் பொருட்களை வாங்க முடிவு செய்யப்படும என்று அவர் தெரிவித்தானர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமானது  அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலில் ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்கு பிறகுதான் பெற முடியும் ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து  ரூ45 பணம் செலுத்தி  தபால் மூலமாக ரேஷன்கார்டு நகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுர்களுக்கு அகவிலைப்படியை 28 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மேலும் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில். ரேஷன் கடை உழியர்கள் பொது மக்கள் பாராட்டும் வகையில் செயல்பட்டால் மாவட்டம் மற்றும் மாநில அளவில் மூன்றாயிரம் முதல் பதினைந்து ஆயிரம் வரை ரொக்க பரிசு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
Parthipan K