தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

0
63

தமிழகத்தில் கோவை,ஈரோடு,நீலகிரி,தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம்,புதுவை கடலோர பகுதியில் லேசான மழையும்,கோவை,நீலகிரி,தேனி, ஈரோடு,சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மழை பதிவாகி உள்ள இடங்கள்:
நீலகிரி மாவட்டம் தேவாலா,கோவை மாவட்டம் சின்னக்கல்லார்,வால்பாறை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K