தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
155

தானம் கொடுக்கும் பொழுது தவிர்க்கக்கூடிய பொருட்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

தானம் என்பது பொதுவாக அனைவருமே செய்யக்கூடியதாக உள்ளது நம்முடைய திருமண, நாள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் மற்றவர்களுக்கு தானம் கொடுத்தல் புண்ணியம் சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அவ்வாறு தானம் செய்யும் பொழுது என்ன பொருட்களை தந்தால் மகாலட்சுமி உங்களை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

தானம் செய்வதில் மிகுந்த கவனம் தேவை. எந்த பொருட்களை தானம் கொடுத்தால் அவை நமக்கு அதிக அளவு பயன் அளிக்கும் என்பதை பொருத்தே நாம் தானம் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தொடப்பத்தை எப்பொழுதும் தானம் கொடுக்கக் கூடாது.

அவ்வாறு கொடுத்தால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை கொடுக்கும் பொழுது புதிய சாதத்தை மட்டுமே நாம் கொடுக்க வேண்டும் நாம் பயன்படுத்திய பிறகு அந்த பழைய சாதத்தை ஒருபோதும் தானமாக கொடுக்க கூடாது. அவ்வாறு செய்தால் செலவு அதிகரிக்கும்.

அதன் பிறகு பிளாஸ்டிக் பொருட்களை ஒருவருக்கு தானம் தரக்கூடாது அவ்வாறு கொடுப்பதன் மூலம் துரதிஷ்டம் உண்டாகும். அதன் பிறகு உங்க வீட்டில் உள்ள கூர்மையான பொருட்கள் கத்தி ,ஊசி, கத்திரிக்கோல் போன்ற பொருட்களையும் தானம் அளிக்கக் கூடாது அவ்வாறு கொடுத்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகளும் ஏற்படும்.

அதன் பிறகு நாம் வீட்டில் வைத்துள்ள பூஜை சாமான்கள் சாமி படங்கள் சாமி சிலைகள் போன்றவை தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுப்பதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அதிர்ஷ்டம் உங்களை விட்டு சென்றுவிடும். அதன் பிறகு கிழிந்த துணிகளை ஒருபொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. உங்களிடம் யாரேனும் உதவி கேட்டு வந்தால் அவர்களுக்கு ஒரு பொழுதும் பணம் தானமாக கொடுக்காமல் அந்த பணத்தில் உணவு வாங்கி கொடுப்பது மிக சிறந்ததாக அமையும்.

author avatar
Parthipan K