கடுமையான வெயிலுக்கு மத்தியில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
69

தமிழ்நாட்டில் தற்சமயம் பணி காலம் முடிவுற்று கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் வெப்பம் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வருகிறது.இதனால் காலை நேரங்களிலேயே பொதுமக்கள் வெளியே தலையை நீட்ட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அதிலும் தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்களின் நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், இந்திய பெருங்கடலில் கிழக்குப் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வரும் 19ஆம் தேதி அதாவது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றைய தினம் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.