அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் பகுதிகள்!

0
65

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, மார்ச் மாதம் 3ம் தேதி அதாவது நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மார்ச் மாதம் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, போன்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களிலும் கனமழை வரையிலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மார்ச் மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது

விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களிலும் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.