2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!

0
190
#image_title

 

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது மிக கடினம் – பிரசாந்த் கிஷோர்!!

இந்திய அரசியல் வாதிகளுக்கு தெரிந்த முகம் என்றால் அது பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தான். சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்றால் கடவுளிடம் போவார்கள், ஆனால் அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் போய் தங்களுடைய குறைகளை சொல்லும் நபர் இவர்தான்.

இந்தியாவின் பல அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை அந்த மாநிலங்களில் ஆளும் கட்சியாக மாற்றியதும், பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு ஆலோசனை கூறி நாட்டின் பிரதமராகவே அமரவைத்த பெருமை பிரசந்த்கிஷோரையே சாரும், தமிழகத்தில் கூட கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த பெருமையும் இவரையே சாரும்.

அடுத்த ஆண்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தேர்தல் வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை எதிர்கட்சிகள் அணுகிய நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்கட்சிகள் ஆடி போய் உள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்கட்சிகள் ஒன்றிணைப்பது மிக கடினம், பாஜகவை பொறுத்தவரை மூன்று விதமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர், அவற்றில் இரண்டையாவது முந்தினால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார்.

எதிர்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுபட்டுள்ளது, இந்த சூழ்நிலையில் அவற்றை ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றி பெறுவது மிக அரிதான அபூர்வமான ஒன்று, மேலும் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபயணம் மேற்கொண்டதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை, எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது என்பது நடக்குமா என்பது தெரியவில்லை, முதலில் அவர்களின் வலிமையை புரிந்துகொண்டு எதிர்கட்சிகள் கருத்தொற்றுமை யுடன் இருப்பது மிகவும் அவசியம் என கூறினார்.

பிரசாந்த் கிஷோரின் இந்த அறிக்கையால் எதிர் கட்சிகள் என்ன செய்வது என்று புலம்பி வருகின்றனர். மேலும் அரசியல் நோக்கர்களிடையே பெறும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.