இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

0
75

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமாக விளையாடியதால் இருவரையும் தேர்வுக்குழு நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புஜாராவும், ரஹானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஹானேவும், புஜாராவும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ரஹானே ஒரு டெஸ்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் அது போதுமான ரன் கிடையாது. ஆகவே, இருவரையும் ரஞ்சி போட்டியில் விளையாட தேர்வுக்குழு அறிவுறுத்தி உள்ளது.

அந்த போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணிக்கு மீண்டும் நுழைவது கடினம் என கூறியுள்ள கவாஸ்கர், அவ்வாறு அவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு நுழைய வேண்டுமென்றால் 200 முதல் 250 ரன்கள் வரை அவர்கள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எனினும், தற்போது இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிறகு, இந்தியா இங்கிலாந்துடன் ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாட உள்ளது. அதன் பிறகு உலக கோப்பை வந்து விடுகிறது. உலக கோப்பை முடிந்து நவம்பர், டிசம்பருக்கு பிறகுதான் டெஸ்ட் தொடர் நடைபெறும். அப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் அவர்கள் இருவரும் அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K