சீன விமானத்தில் திடீர் விபத்து! மீட்புப் பணிகள் தாமதம்!

0
71

வீடியோ சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்த நாட்டின் குன்மிங் நகரிலிருந்து வுஜோ நகருக்கு நேற்று பயணமான போது விபத்தில் சிக்கியது.

அந்த விமானத்தில் ஒட்டுமொத்தமாக 133 பயணிகள் இருந்ததாக முதலில் தகவல் கிடைத்தது. தற்சமயம் அந்த விமானத்தில் 123 பயணிகள் மற்றும் 9 விமானிகள் உட்பட 132 பேர் இருந்ததாக சீன விமானப் போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.

குவாங்சி மாகாணத்திலிருக்கின்ற மலைப்பகுதியின் மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இதன் காரணமாக, உண்டான தீ அந்த பகுதியில் மளமளவென பரவியது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். அதோடு தற்சமயம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது அதை தொடர்ந்து அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்புக் குழு ஈடுபட்டிருக்கிறது.

ஆனாலும் பலத்த காற்று மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, தேடுதல் முயற்சியில் பின்னடைவு உண்டாகிவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 132 பேரின் நிலை என்ன என்பது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்த எல்லோரும் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.அத்துடன் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த யாரும் பயணம் செய்யவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது.