இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

0
187

இதில் தாமதம் கூடாது! அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டக்கூடாது. விரைந்து செயல்பட வேண்டும். என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

தினசரி காலை உணவு வழங்குவதால் நம்மை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்த்தி கொண்டிருக்கின்றன. மக்களைத் தேடி மருத்துவம் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும் நம்மை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே திட்டங்களை  செயல்படுத்துவதில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும்.

மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று வரும் மாணவிகள் நம்மை பாராட்டி வருகின்றனர். இவை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தெரியக்கூடிய நிகழ்ச்சிகள். இதேபோல் அனைத்து திட்டங்களிலும் பயனாளர்கள் பயன் பெற்று மகிழ்ச்சி அடைந்தால் எட்டு கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு மாறிவிடும்.

இவை அனைத்தும் அதிகாரிகளாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டக் கூடாது. திட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தடங்கல் இருக்கலாம். அந்தத் தடங்கலை உங்களால் கண்டறிய முடியும். இதை அதிகாரிகள் மத்தியில் கூட்டத்தைக் கூட்டி தடங்கலை சரி செய்து திட்டத்தை நிறைவேற்றுவது உங்களின் கைகளில் தான் உள்ளது.

மேலும் திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற நிலையை எட்ட வேண்டும். என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.