தமிழகத்தில் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஆகலாம் ! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி?

0
90

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் உள்ளதால் முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு இப்போது வரை நீடிக்கிறது.இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் செயல்பட முடியாத காரணத்தினாலும் தொற்று பரவுதலின் வீரியத்தினாளும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு உத்தரவிட்டது.மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் செங்கோட்டையன் கோபி செட்டிபாளையத்தில் இது குறித்து பேசியதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்.

மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றுஅறிவித்த நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதால் முதல்வருடன் ஆலோசித்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

author avatar
Parthipan K