எங்களுக்கு மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

0
73

வாட்ஸ்அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு படி தனிநபரின் தகவல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு உண்டாகியது.

இந்தநிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வகுத்த புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக டெல்லியை சேர்ந்த கார்மானியா சிங்சரின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் புதிய கொள்கை குறித்து நீதிபதிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் தெரிவித்த கருத்தில் தனி ஒருவரின் தகவல்களை மக்கள் பெரிதாக நினைக்கின்றார்கள். அவர்களுடைய நலனை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். 4 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பு உள்ளதாக வாட்ஸ்-அப் நிறுவனம் இருக்கலாம். ஆனாலும் எங்களுக்கு இந்திய மக்களுடைய பாதுகாப்பு மிக முக்கியம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் அரேபிய நாடுகளை போன்று இந்தியா சிறப்பு சட்டம் கொண்டுவந்தால் பின்பற்ற தயார் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து புதிய பிரைவசி கொள்கை குறித்து வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக், அதோடு மத்திய அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை சுமார் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.