இந்த வயதினரும் இனி தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
93

இந்த வயதினரும் இனி தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில், கொரோனா பரவலை குறைத்து நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டன. மேலும், இந்த தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வந்தன. இதன் காரணமாக, இந்தியா உள்பட பல உலக நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவும் கொரோனா தொற்றை போன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வந்தது. எனவே இதனை எதிர்த்து செயல்படக்கூடிய வகையில் மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தியாவில் ஆரம்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 12 வயதில் இருந்து 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K