வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

0
159

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மிகப்பெரிய ராக்கெட் ஆன எல்விஎம் 3 வணிக சேவைக்காக விண்ணில் ஏவுகிறது. எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைக்கோள்களுடன் வருகிற 23ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வே நிறுவனம் இணைய பயன்பாட்டுகளுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் அரசு, கல்வி வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டிற்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது.
இந்த நிறுவனம் இந்த பணியை இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில் எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைக்கோள்களுடன் வருகிற 23ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து இரவு 12.07 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த ராக்கெட் ஆனது 43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் இதுவரை அரசு செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இது முதன்முறையாக வணிக செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நியூஸ் பேஸ் இந்திய நிறுவனம் மற்றும் பிரிட்டனின் ஒன் வே நிறுவனம் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் அடிப்படையில் செயற்கைக்கோள்களை எல்விஎம் 3 விண்ணில் ஏவுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் சர்வதேச வணிக சேவை சந்தையில் எல் வி எம் 3 நுழைகிறது.

author avatar
Parthipan K