ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும் கார்டோஸாட் செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

0
56

ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர். 26-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (புதன் கிழமை ) காலை 9.28 மணிக்கு கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது. இந்தியாவின் எல்லை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு இந்த கட்ரோசாட் செயற்கைகோள் பயன் படுத்தப்படும்.
கார்டோசாட் செயற்கைகோள் 1,625 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை தெளிவாக படம் பிடிக்க முடியும்.

எல்லையில் உள்ள ஒவ்வொரு நகர்வையும் இந்த செயற்கைகோள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இரவு நேரத்திலும் இந்த செயற்கைகோளால் இந்திய எல்லைகளை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்ப முடியும்.

கட்ரோசாட் செயற்கைகோள் மூலம் இந்தியாவின் அனைத்து நீர் நிலைகளையும் கண்காணிக்கமுடியும். அதுபோல் பேரிடர் காலங்களில் இந்த செயற்கைக்கோளை சிறப்பாக பயன்படுத்தமுடியும். புயல் பாதிப்பு, பேரிடர் அபாய பகுதிகள் ஆகியவற்றை கணித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்க முடியும்.

மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த செயற்கைகோளால் படம் பிடிக்க முடியும். அதற்கு ஏற்ப கட்ரோசாட் செயற்கைகோள் 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது. 5 ஆண்டுக்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என isro தெரிவித்துள்ளது.

கட்ரோசாட் செயற்கைகோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறிய வகை செயற்கைகோள்களையும் isro விண்ணில் செலுத்துகிறது.

author avatar
CineDesk