இனி வாட்ஸ் அப்பில் இதை செய்ய முடியாது! வாட்ஸ்அப் நிறுவனம் வைத்த மிகப்பெரிய ஆப்பு!

0
76

உலகம் முழுவதும் பல கோடி நபர்கள் வாட்ஸ் அப்பின் வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் தகவலை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது.

புகைப்படம், வீடியோக்கள், மட்டுமல்லாமல் தற்போது பணம் அனுப்பும் முறை வந்துவிட்டது. அதே சமயத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

அதே சமயம் திடீரென்று வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி வருகின்றது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் வழங்கிய புகார்களினடிப்படையில் ,சுமார் 122 கணக்குகளை தடை செய்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல வாட்ஸ்அப் செயலியில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறோம். நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பின்னர் அதனை கண்டறிவதைவிட தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தடை தொடர்பான விளக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியிருக்கிறது.