தமிழகத்தின் நம்பர் 1 நூலகத்தின் நிலை இதுதானா? தொடர் குற்றச்சாட்டை பதிவு செய்யும் வாசகர்கள்!

0
72
Is this the status of the No. 1 library in Tamil Nadu? Readers who record serial accusation!
Is this the status of the No. 1 library in Tamil Nadu? Readers who record serial accusation!
தமிழகத்தின் நம்பர் 1 நூலகத்தின் நிலை இதுதானா? தொடர் குற்றச்சாட்டை பதிவு செய்யும் வாசகர்கள்!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள கம்பம் தெற்கு கிளை நூலகம் 25 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரைகளை பராமரித்து தர வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது கம்பம் தெற்கு கிளை நூலகம். இந்த நூலகமானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் 1996 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இந்த நூலகத்தில் தற்சமயம் 6200க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள், 114-புரவலர்கள், 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகமானது கடந்த ஆட்சியில் தமிழகத்தில் மிகச்சிறந்த நூலக வாசகர் வட்டமாக தேர்வு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த நூலகத்தின் நூலகரான மணி முருகன் என்பவரும் நல் நூலகர் விருதைப் பெற்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் கம்பம் நகரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் நிலையில் இந்த நூலகத்தின் தேவை கம்பம் பகுதியில் மிகவும் முக்கியமானதாக உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நூலகங்கள் இருந்தாலும் இந்நூலகத்தில் வாசகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் என்பதுடன், அரசின் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையமாகவும் இந்த நூலகமானது விளங்கி வருகிறது.
கம்பம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் அறிவுத் தேவையை பூர்த்தி செய்யும் கம்பம் தெற்கு கிளை நூலகம் தற்போது பகுதிநேர நூலகமாக செயல்பட்டு வருகிறது. தாலுகா மற்றும் மாவட்ட நூலகம் மட்டுமே முழுநேர நூலகமாக செயல்பட்டு வரும் நிலையில் , கம்பம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் நூலகமான கம்பம் தெற்கு நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்ற வேண்டும் என இப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெண்கள் தங்களது பணிகளை முடித்துக்கொண்டு ஓய்வு நேரமான பிற்பகல் வேலையில் இந்த நூலகம் அடைக்கப்படுவதால் தங்களால் நூலகத்திற்கு வரமுடியவில்லை என அப்பகுதி பெண்கள் கூறி வருகின்றனர்.
காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும் கம்பம் தெற்கு நூலகத்தை, முழு நேர நூலகமாக மாற்றினால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இப்பகுதி வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும் கம்பம் தெற்கு நூலகத்தின் கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் மேற்கூரை கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் நூலகத்தின் கழிப்பறை மேற்கூரையும் கழிப்பறையும் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால், நூலகக் கட்டடத்தையும், கழிவறையும் பராமரித்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி வாசகர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி வாசகர்கள் கூறுகையில், ” கம்பம் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் கம்பம் தெற்கு கிளை நூலகத்தில் மேற்கூரை முழுதும் சேதமடைந்துள்ளது. 25 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால் மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டு வருகிறது. நூலகத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆரோ வாட்டர் இயந்திரமும், வாசகர்கள் அமரும் வகையில் மேசையும், பிரிண்டர் உள்ளிட்ட இயந்திரங்களும் சமூக ஆர்வலர்களால் இலவசமாக நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அதிகம் பயன்படும் இந்த நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வார மற்றும் மாத இதழ்களும் கிடைக்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.