சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்!

0
95
Is this the situation of the rice farmer?
Is this the situation of the rice farmer?

சோறு போடும் விவசாயிக்கே இந்த நிலைமையா? உதகையே உறைய வைக்கும் சம்பவம்!

நாம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ளோம்.இந்த காலத்தில் பல மாற்றங்களை நன்மையாகவும் பல மாற்றங்கள் தீமையாகவும் உள்ளது.தற்போது பல பிரச்சனைகளை முன் வந்து சொல்ல மக்கள் துணிந்து உள்ளனர்.ஆனால் சில இடங்களில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல இன்றளவும் முன் வரவில்லை.அந்தவகையில் சில காலமக இந்த கந்து வட்டி பிரச்சனை தலைவிரித்து ஆடும் அளவிற்கு வந்துள்ளது.

வாங்கிய கடனிற்கு மக்கள் வட்டி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அதிலும் குறிப்பாக நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் கந்து வட்டி பிரச்சனையால் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.நமக்கு உணவளிக்கு விவசாயிகளை ஓர் பக்கம் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.இந்த சூழலில் அவர்கள் நமக்கு உணவு அளிப்பதற்காக பலரிடம் கடன் வாங்கி தங்களது நிலத்தில் போடுகின்றனர்.ஆனால் தற்போது மாறிய கால சூழலாலும்,அரசாங்கத்தின் விதிமுறைகளாலும் அவர்களின் உழைப்பிற்கு பயனில்லாமல் போய்விடுகிறது.

அந்தவகையில் தற்போது நீலகிரி மாவட்டம் உதகை அருகே நடந்த சம்பவம் அனைவரையும் பதைபதைக்க செய்கிறது.நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமத்து பகுதியை சேர்ந்தவர் மார்லிமந்து.இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஆடு,மாடு பசுக்கள் வைத்தும்,தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.அவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார்.மேலும் இவருக்கு மகள் ரஷிதா வயது(16) மகன் விஸ்வந்தர் வயது (12) ஆகியோர் உள்ளனர்.இவர் நீண்ட நாட்களாக கந்து வட்டி பிரச்சனையால் சிரமப்பட்டு வந்துள்ளார்.

வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் பெருமளவு சிரமப்பட்டுள்ளர்.அதனால் இவர் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.அதனையடுத்து தனது மகள் ரஷிதா மற்றும் மகன் விஸ்வந்தர்-க்கு சாப்பிடும் உணவில் செடிக்குபோடப்படும் பூச்சு மருந்த கலந்து கொடுத்துள்ளனர்.அவர்களுக்கு அதை கொடுத்துவிட்டு கணவன் மற்றும் மனைவி இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.இவர்கள் வளர்க்கும் பசு மாடு வெகு நேரமாக தண்ணீர் இல்லாததால் சத்தம் போட்டு உள்ளது.இவரது பக்கத்து வீட்டுக்காரரான கிருஷ்ணன் என்பவர் வெகுநேரம் மாடு கத்தி கொண்டே இருப்பதால் மார்லிமந்துவின் உறவினரான நந்தகுமாருக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தது கூறியுள்ளார்.

நந்தகுமார் மார்லிமந்து வீட்டிற்கு வந்து கதவை தட்டி பார்த்துள்ளார்.கதவு திறக்கப்படாமல் உள்தாழ் போட்டியிருந்தது.அதனையடுத்து கதவை உடைத்து பார்த்தனர்.அப்போது அங்கு கணவன் மனைவி இருவரும் தூக்கு மாட்டிய படியும்,குழந்தைகள் இருவரும் வாயில் நுறை தள்ளியப்படியும் கிடந்தனர்.மேலும் இதுபற்றி  புதுமத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து நால்வரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை கவலையுற செய்கிறது.