அமெரிக்காவையே எச்சரிக்கிறாதா இந்த நாடு?

0
67
சீனாவின் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் உளவு விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி பறந்ததாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக DF-26B, DF-21D ஆகிய 2 ஏவுகணைகளை சீனா தென்சீனக் கடலில் ஏவியுள்ளது. இதில், DF-21 ஏவுகணை விமானம் தாங்கி கப்பலை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது.
DF-26B இடைநிலைத்தூர அணுஆயுத ஏவுகணையாகும். இதை குயிங்காய் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. DF-21D-ஐ ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது. மீடியம்-ரேஞ்ச் அணுஆயுத ஏவுகணை ஆகும்.
author avatar
Parthipan K