ஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

0
82

உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட நாடு தென் கொரியா. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் தென்கொரியாவில் பிறப்புகளைவிட இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

2020 ஆம் ஆண்டை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக உள்ளதாம்.அதாவது கடந்த ஆண்டு 2,75,800 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளதாகவும், ஆனால் இறப்பு எண்ணிக்கை 3,07,764 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டில் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு அதிக பணம்செலவாகி வருவதாகவும், மேலும் நாட்டில் போதிய அளவு தொழிலாளர்கள் இல்லாமையாலும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனை சரி செய்வதற்காக அதிபர் மூன் ஜே இன் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.இக்கொள்கைகளின்படி ஒரு குடும்பத்தில் முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கு தலா 20 லட்சம் வான் வழங்கப்படும் எனவும்,மேலும் அக்குழந்தைக்கு ஒரு வயதுவரும் வரை மாதத்திற்கு மூன்று லட்சம் வான் வழங்கப்படும் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் காலத்தில் இதன் மானியத்தை உயர்த்தி அதாவது ஒரு வயது வரை மாதத்திற்கு 5 லட்சம் வரை வழங்கப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

மக்கள்தொகை குறைவதற்கு தென்கொரியா சில காரணங்களை முன்வைக்கிறது.வளர்ந்துவரும் காலகட்டங்களில் பொருளாதார நெருக்கடியை ஈடு செய்வதற்காக பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது இதனால் பொருளாதாரத்தில் முழு ஈடுபாட்டையும் காட்டும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லையாம்.மேலும் குழந்தை பெற்று கொண்டால் தன் வேலைக்கு பாதிப்பு வந்துவிடும் என்றும் நினைக்கிறார்களாம்.

author avatar
Parthipan K