சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!

0
94
Is there poison in Salem Lake? Dead fish floating in clusters!
Is there poison in Salem Lake? Dead fish floating in clusters!

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!

சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாங்கனி மற்றும் மேட்டூர் ,ஏற்காடு போன்றவை தான். அந்த வகையில் பல சிறப்பு மிக்கவை சேலத்தில் உள்ளது. சேலம் அருகே உள்ள பகுதிதான் வீராணம். வீராணம் அருகே   இருக்கும் ஏரிதான் அல்லிகுட்டை ஆகும். தற்பொழுது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏரி ,குளம் குட்டை போன்ற வற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.அந்தவகையில் அல்லிக்குட்டை ஏரியில் தொடர் கனமழை காரணமாக தண்ணீர் நிரம்பி வழிந்தது.இதனால் அங்கு மீன்களும் அதிகளவு காணப்பட்டது. இந்த  அல்லிக்குட்டை ஏறி ஆனது 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

கள்ளிக்குடி ஏரியானது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் ஏரியை பராமரிக்கவும் அதில் உள்ள மீன்களை பிடிக்கவும் மாநகராட்சியானது , தனியாருக்கு குத்தகை விட்டுள்ளது. இரு தினங்களாக சேலத்தில் கனமழை பெய்து வருகிறது.குத்தகை விட்டவர்களும் தொடர்ந்து மீன் பிடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர்.முதலில் இரு தினங்களுக்கு முன்  சிறு மீன்கள் செத்து மிதந்தது.ஆனால் அதிகாலை அல்லிக்குட்டை ஏரியில் கொத்துக்கொத்தாக பெரிய மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தது.இதனைப் பார்த்த பொதுமக்கள் பெருமளவு அதிர்ச்சியடைந்தனர்.ஏனென்றால் ஒரு நாளுக்கு முன்புதான் சிறிய மீன்கள் செத்து கிடந்தது ஆனால் இன்றோ ஜிலேபி, கட்லா போன்ற வகை சார் மீன்கள் அனைத்தும் ஏரியில் இவ்வாறு கொத்து கொத்தாக செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்கள் ஏன் இவ்வாறு செத்து கிடந்தது என்பது குறித்து மக்கள் பலர் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.அவ்வாறு பேசும் வகையில் ஏறி தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.அதனால்தான் ஏரியில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்து காணப்படுகிறது என அங்குள்ள சுற்று வட்டாரங்கள் பேசி வருகிறது. சிறிய மீன்கள் இறந்த நிலையில் தற்போது பெரிய  மீன்கள் செத்து மிதப்பதற்கு அதுதான் காரணம் என்றும் சிலர் நம்புகின்றனர். மேலும் ஏரி நீரில் கழிவு நீர் ஏதேனும் கலந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் ஏரியில் மீன்கள் செத்து கிடப்பதையடுத்து அது சார்ந்த துறை அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அப்பொழுதுதான் ஏரியில் எந்த காரணத்திற்காக மீன்கள் செத்து கிடக்கின்றன என்பது தெரியவரும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.