இனி கஷ்மீர் இல்லையா? கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஏன் ரத்து? நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

0
62

தீவிரவாதி ஊடுருவல் என கஷ்மீர் மக்கள் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியது திரு அமித்ஷா தலைமையில். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது.

மத்திய காவல் படைகள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்ற இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பரவத் தொடங்கியதில் இருந்து காஷ்மீர் மக்களிடையே கடந்த சில நாட்களாக அச்ச உணர்வு நிலவுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தலைவர்கள் முதல் மக்கள் வரை வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நேற்று சந்தித்தார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அமித்ஷா தலைமையில் நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய படுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனால் கஷ்மீர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K