சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா!

0
154
#image_title

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா!

புதினா இலைகளை நாம் உணவுகளுடன் சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சிறிதளவு பொதினா இலைகளை சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்துகிறது அதனைப் பற்றி விரிவாக காணலாம்.

புதினா ரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீக்கும், பசியின்மையால் அவதி படக்கூடியவர்கள் தினசரி புதினா இலைகளை உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதன் காரணமாக பசியை தூண்டி பசியின்மையை போக்குகிறது. புதினா இலைகளை அசைவம் மற்றும் கொழுப்பு பொருட்களை இரவில் ஜீரணமாக உதவுகிறது.

புதினா இலைகளில் உள்ள மருத்துவ குணங்கள் மலச்சிக்கலை நீக்கி பெண்களின் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

புதினா இலைகளை நீர் சேர்க்காமல் அரைத்து நம் உடலில் ஏற்பட்டுள்ள தசை வலி, நரம்பு வலி, தலைவலி, கை கால் பிடிப்பு உள்ள இடங்களில் பத்து போன்று தடவுவதன் காரணமாக எவ்வித பிரச்சனைகள் உடனடியாக குறைக்க உதவுகிறது.

புதினா இலைகளை கீரையாக சமைத்து கொள்வதன் காரணமாக மஞ்ச காமாலை, வாதம் மற்றும் வறட்டு இருமல் மற்றும் ரத்த சோகை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் முற்றிலும் குணப்படுத்த உதவுகிறது.

செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் ஏற்படக் கூடியவர்கள் புதினா இலைகளை ஜூஸ் போன்று தயார் செய்து குடிக்கலாம். உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பாதிப்புகளை குணப்படுத்தும் மருந்தாக புதினா இலைகள் உதவுகிறது.

author avatar
Parthipan K