எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை! பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

0
72

சென்ற மாதம் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா தமிழகம் அந்த நேரத்தில் அவர் முன்னிலையிலேயே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தார்கள். ஆனாலும், அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் முதல்வர் வேட்பாளரை பாஜக இன்னும் ஏற்கவில்லை அது தொடர்பான விவாதங்கள் எழும் போதெல்லாம், முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக இரண்டு கட்சி தலைவர்கள் இடையில் சூடான விவாதமும் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக,எதிர்வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்திருக்கின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்து இருக்கின்றார்.

கோயமுத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையில், அதிமுக மற்றும் பாஜக இடையே இருக்கும் நல்லுறவில் எந்த வித குழப்பமும் கிடையாது. இரண்டு கட்சிகள் இடையே நல்ல புரிதல் மற்றும் ஒற்றுமை இருக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியை மிகச்சிறப்பாக ஒன்றிணைத்து செல்கின்றார். பல சந்தர்ப்பங்களில் பாஜகவிற்கு அதிமுக உறுதுணையாக இருந்து வருகின்றது. கூட்டணி தர்மப்படி பாஜகவின் கூட்டணியில் தான் அதிமுக இருக்கின்றது இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றார்.