இந்தியாவின் தொழில் அதிபர் இந்த நாட்டுக்கு துணை மேயரா?

0
58

இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வானார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக பொறுப்பேற்றார். இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா பெற்றார்.

author avatar
Parthipan K