தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

0
152

தளபதி 67 படத்தின் கதாநாயகி இவரா? நீண்ட கால இடைவெளிக்கு பின் ஜோடி சேரும் முன்னணி நடிகை வெளியான லேட்டஸ்ட் அப்டேட்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்து இவர் இயக்கிய கைதி வெற்றி பெறவே அடுத்து இளைய தளபதியை வைத்து மாஸ்டர் படத்தையும் உலகநாயகனை வைத்து விக்ரம் 2 படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் வெற்றியாகி வசூலில் கலக்கியது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ்  தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார். இவர்களுடன் கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் மேலும் படத்தில் முன்னணி நடிகர்களான பகத் பாசில் கமல்ஹாசன் நடிகர் விக்ரம் போன்றோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க தினேஷ் குமார் நடன இயக்குனராக பணிபுரிய இருக்கிறார்.

படக்குழுவானது படப்பிடிப்பிற்காக தனி விமான மூலம் காஷ்மீருக்கு சென்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் மற்றும் இவர்களுடன் நடிகை திரிஷாவும் சென்றுள்ளார். நடிகை திரிஷா விமான நிலையம் சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதன் மூலம் நீண்ட நெடிய இடைவெளிக்கு பின்பு விஜய் உடன் நடிகை திரிஷா ஜோடி சேர்கிறார்.