நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

0
115
Is sexual harassment of women in Parliament? Very bad condition!
Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண்களில் மூன்றில் இருவர் பாலியல் தொல்லைகளை அனுபவிப்பதாக அந்நாட்டின் பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆணையர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதனால் அங்கு பெண்களின் நிலை மிகவும் ஆபத்தில் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு அனைத்து துறைகளிலுமே ஒரு சில இடங்களில் இந்த மாதிரியான அவமதி மரியாதைகளும், பாலியல் வன்முறைகளும், சில இதயமே அல்லாத ஜென்மங்களால் தரப்படுகின்றன. அதிலும் முக்கியமாக பாராளுமன்ற பணியிடங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவும், மரியாதை கூறியதாகவும் இருப்பதை உறுதி செய்வதையே இந்த மதிப்பாய்வு அமைக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

இந்த மதிப்பீட்டில் பெண்களின் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் ஊழியர் பிரிட்டானி ஹிக்கின்ஸ்  மற்றவர்களின் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், அதற்கு தூண்டுதலாகவும் இருந்து செயல்பட்டு உள்ளார். கேட் ஜெக்கின்ஸ்ன் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். அதில் உள்ள இந்த கருத்துகள் குறித்து முன்னாள் அரசியல் ஊழியரான பிரிட்டானி ஹிக்கின்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அதன் படி நாடாளுமன்ற அலுவலகங்களில் கூட கொடுமைபடுத்துதலும், பாலியல் வன்கொடுமைகளும் குறித்து குற்றச்சாட்டுகள் தெரிவித்திருப்பது குறித்து ஆராயப்பட்டது. தற்போதைய முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் பணியாளர்களுடன் கிட்டத்தட்ட 500 பேரிடம் இது மறைமுகமாக பேட்டி ஒன்றை எடுத்தனர்.

அதில் பங்களித்தவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். இந்த பணியிடங்களில் 26 சதவிகிதம் ஆண்களை விட பெண்கள் அதாவது 40 சதவிகிதம் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதுவும் குறிப்பாக பாலியல் துன்புறுத்தலை அனுபவிக்கின்றனர். இந்த ஆய்வில் பங்குபெற்ற பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் ஐம்பத்தி ஒரு சதவிகிதம் பேர் கொடுமைப்படுத்துதல் அல்லது பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு ஒரு முறையாவது பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த வாக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஸகாட் மோரிசன் அறிக்கை விவரங்கள் வருத்தத்தை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். பலதரப்பட்ட இடங்களிலும் பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் பணிச் சூழல் குறித்து சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ள தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும், அது குறித்த அறிக்கை தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டிய நெருக்கடி நிலை பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு ஏற்பட்டுள்ளது.