சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

0
94

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? விராட் கோலி? சச்சினா? என்ற கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ருசிகரமான பதிலை அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசி இந்தியாவில் கிரிக்கெட் ஜாம்பவானாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது இவரைப்போல விராட் கோலியும் விளையாடி வருவதாக சச்சின் உடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.

சர்வதேச போட்டிகளில் சதங்களையும் சாதனைகளையும் புரிந்து சமகாலத்தில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கி வருகிறார். இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆக வலம் வரும் இவர் கடந்து சில போட்டிகளில் சோபிக்க முடியாமல் திணறி வந்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தனது பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளார்.

மேலும் வங்காதேசம் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்ததன் மூலம் உள்ளூர் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் சர்வதேச போட்டிகளில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா? அல்லது விராட் கோலியா? என்ற விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கு ஒவ்வொரு வீரர்களும் தங்களது கருத்துக்களை ஒவ்வொரு விதமாக பதிவு செய்து வருகின்றனர். இந்தக் கேள்விக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் ருசிகரமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. எனது காலத்தில் சுனில் கவாஸ்கர் சிறந்த வீரராக இருந்தார். அடுத்து 1990 – 2000 காலகட்டங்களில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் போன்றவர்களும் சமகாலத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்களும் சிறந்து விளங்குகின்றனர். அப்போது இருந்த கிரிக்கெட் விதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தற்போது அப்டேட் ஆகிவிட்டன. மேலும் t20 போட்டிகள் வந்தபிறகு ஆட்ட அணுகுமுறைகள் மாறிவிட்ட சூழ்நிலையில் முந்தைய வீரர்களுடன் சமகால வீரர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது.

முந்தைய ஆட்டத்தில் சச்சின் இன்றைய சமகாலத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி நாளைய காலங்களில் இவர்களை விட சிறப்பாக விளையாடும் வீரர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். வரும் காலங்களில் விராட் கோலியை விட அதிக ரன் எடுக்கும் வீரர்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச போட்டிகளில் சச்சின் 100 சதங்களையும் விராட் கோலி 74 சதங்களையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.