அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?

0
103

அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?

சமீபத்தில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், ரஜினி-கமல் ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கமல் மற்றும் ரஜினி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது

இந்த நிலையில் ரஜினி-கமல் அரசியலில் இணைவது என்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல், ரஜினி ஆகிய இருவரும் 40 ஆண்டுகால நண்பர்களாக இருந்தாலும் இருவரும் கொள்கை அளவில் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். ரஜினிகாந்த ஆன்மீக அரசியலை முன்வைப்பவர், ஆனால் கமல்ஹாசன் பகுத்தறிவு அரசியலை முன்வைப்பவர். எனவே இருவரும் இணைந்து அரசியலில் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது

மேலும் கமலஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். முதல் தேர்தலில் விஜயகாந்த் போல் டீசன்டான ஓட்டுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். அவருக்கு மிகக் குறைந்த சதவீதமே வாக்குகள் கிடைத்துள்ளதால் அவருக்கு மக்களிடம் செல்வாக்கு எவ்வளவு என்பது தெரிந்து விட்டது
ஆனால் ரஜினிகாந்த் இனிமேல் தான் அரசியலில் ஈடுபட போகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தலுக்குப் பின்னரே அவருக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது? என்பது தெரியவரும். இந்த நிலையில் அவர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் அவரது தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு என்பது தெரியாமல் போய்விடும். எனவே பெரிதாக செல்வாக்கு இல்லாத கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் வரும் 2021 சட்டமன்றா தேர்தலில் தனது தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு இருக்கின்றது என்பதை அறிய ரஜினிகாந்த் தனித்தே போட்டியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

author avatar
CineDesk