ஒரு ஆண்டாக டி 20 போட்டி விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?

0
83

இந்திய அணியில் பூம்ராவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட முகமது ஷமி டி 20 போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இப்போது முகமது ஷமி பூம்ராவுக்கு பதில் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக ஷமி டி 20 போட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் இப்போது நேரடியாக இந்திய அணிக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து எழுந்துள்ள விமர்சனம் என்னவென்றால் “ஷமி பும்ராவுக்கு பதில் சரியான மாற்று வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அவர் டி 20 போட்டிகளில் விளையாடவே இல்லை. அதுதான் இப்போது விமர்சனத்துகுள்ளாகியுள்ளது” என முன்னாள் இந்திய வீர்ரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இந்திய அணி இப்போது இருக்கும் நிலைமையில் ஷமியைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார் என்பதும் உண்மையே.