சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா ராதாகிருஷ்ணன்? அடுத்த சுகாதாரத்துறை செயலாளர் இவர்தான்!

0
85

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென்று அந்த பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக பீலா ராஜேஷ் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். சுகாதாரத்துறையில் திறம்பட செயல்பட்டு வந்தவர் ராதாகிருஷ்ணன் அவரை திடீரென்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றியதன் காரணமாக சற்றே விமர்சனங்கள் எழுந்து மறைந்தது.

அதோடு அப்போது நோய்த்தொற்று பரவல் மிகத் தீவிரமாக இருந்த அந்த காலகட்டத்தில் திடீர் என்று சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது பலர் மத்தியிலும் கேள்விக்குறியாக எழுந்து நின்றது. இந்த நிலையில், சிறிது காலம் சுகாதாரத்துறை செயலாளர் என்ற பதவியில் இருந்த பீலா ராஜேஷ் திடீரென்று வணிகவரி துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அதனடிப்படையில் முன்பே சுகாதாரத் துறைச் செயலாளராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் மறுபடியும் அந்த பதவிக்கு வந்தார். நோய்தொற்று தடுப்பு பணியில் தீவிரம் காட்டிய இவர் பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றார்.

அதோடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசுத்துறைகளில் பல அதிரடி மாற்றங்களை செய்தது அனைத்து துறை செயலாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டார்கள் உதாரணமாக தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு இறையன்பு நியமனம் செய்யப்பட்டார், ஆனால் ராதாகிருஷ்ணன் மட்டும் தான் வகித்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் என்ற பதவியில் இருந்து மாற்றப்படவில்லை, சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் மாற்றப்படுவதற்கு உயர் நீதிமன்றமே தமிழக அரசை பாராட்டியது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் மாற்றப்பட இருப்பதாக தகவல் தற்சமயம் வெளியாகியிருக்கிறது, அவருக்கு அடுத்தபடியாக சுகாதாரத்துறை செயலாளர் என்ற பதவிக்கு சமீபத்தில் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்ட அமுதா கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமுதா ஐஏஎஸ் பல பணிகளை மிகவும் திறமையுடன் செய்து முடித்தவர், மணல் கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்த்து நின்று அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஜெயலலிதா, கருணாநிதி, அப்துல்கலாம் உள்ளிட்டோரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினார் அமுதா ஐஏஎஸ்.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அமுதா, துணிச்சலான மற்றும் நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்படும் இவர் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து வந்த சூழ்நிலையில், சமீபத்தில் மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர் என்ற பதவியில் இருந்து மாற்றப்படும் பட்சத்தில் அந்த இடத்திற்கு அமுதா ஐஏஎஸ் கொண்டு வரப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.