மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
149
Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!
Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி  அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று கோவையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு 3500 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் சாலைகள் சீரமைக்கப்படும் பணியில் ரூ 211 கோடி கூறினார். கூடிய விரைவில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல தற்பொழுது வரை விமான நிலையம் விரிவாக்கும் பணியானது 90% முடிவடைந்துள்ளது.

கூடிய விரைவில் அதன் முழு பணியும் முடிவடையும். அதேபோல மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார்.அதில், எதிர்க்கட்சிகள் கூறி வரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு கட்டாயம் என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம். ஆதார் எண் இணைப்பு இல்லாமலேயே மின்கட்டணத்தை செலுத்தலாம். அது மட்டுமின்றி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க போதுமான அளவு கால அவகாசத்தை நீட்டித்துள்ளோம்.

இலவச மானியம் மின்சாரத்தில் உள்ள சீர்கேடு திருத்தம் செய்யவே ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும். மேலும் தற்பொழுது மின் கட்டண உயர்வால் மக்கள் பெருமளவு அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் தற்பொழுது வரை 10% மின்கட்டணத்தில் குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். தற்பொழுது 51 ஆயிரம் கோடி அளவில் மின்சார துறை கடனில் உள்ளது.

இந்நிலையில் மின் கட்டணத்தை ரத்து செய்வது சாத்தியமில்லாதது. இதர மாநிலங்களை விட தமிழ்நாட்டின் மின்கட்டணம் குறைந்த அளவு தான் உள்ளது. அதேபோல தொழில்துறையினர் இந்த மின் கட்டணத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றனர். இவ்வாறு கடன் இருக்கையில் மின்கட்டணம் தை ரத்து செய்வது முடியாத ஒன்று. அதனால் தொழில்துறையினர் இந்த மின்கட்டணத்தை ஏற்க வேண்டும்.