மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

0
56

கேட்க ஆளில்லாத ஒரு மொழிக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் என விசிகவின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு தினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்புவதற்கு என்று நேரம் ஒதுக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த சமஸ்கிருத திணிப்பு உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

பிரசார் பாரதி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இருக்கின்ற பொதிகை தொலைக்காட்சியின் கொள்கைகள் எவை என்பது அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன மாநில மொழிகளை மேம்படுத்துவதற்கு என்றே மாநில அளவிலான தொலைக்காட்சி சேவைகளை இந்த சட்டம் உருவாகியிருக்கின்றது இந்த சட்டத்தின் கொள்கைப்படி தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக விளிம்புநிலை மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவதற்காக எந்தவித நிகழ்ச்சிகளும் பொதிகை தொலைக்காட்சியில் நடத்தப்படுவதில்லை.

ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் சமஸ்கிரத செய்தி ஒளிபரப்புவதற்கு 15 நிமிடங்களை ஒதுக்கிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது கேட்க ஆளில்லாத ஒரு மொழிக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது மாற்று மொழி பேசுவோர் மீது இந்தியை போலவே சமஸ்கிருதத்தையும் திணிப்பது எதற்காக இது மதவெறி பிடித்த பாஜகவின் மொழிவெறி போக்கையும் வெளிப்படுத்துகின்றது இந்த அரசாணை ஏற்புடையது கிடையாது.

2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியா முழுவதிலும் 24 ஆயிரம் நான் அவர்கள் தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வந்திருக்கின்றது. இதில் தமிழகத்தில் 803 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது ஏழரைக் கோடி தமிழர்கள் இருக்கும் இந்த மாநிலத்தில் 803 பேறுக்காக செய்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினால் தமிழை தாய்மொழியாக வைத்திருப்பவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். இதேபோல இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ் செய்தி அறிக்கைக்காக 15 நிமிடங்களை மத்திய அரசு ஒதுக்குமா அப்படி செய்ய இயலாத போது சமஸ்கிருத செய்திக்காக தமிழகத்தில் மட்டும் எதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் இந்த ஆணை சங்பரிவார் செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே என்பது தெரிய வருகின்றது.

அதோடு இது தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்க்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாக இருக்கின்றது என்பது மட்டும் இல்லை அனைத்து மொழிகளுக்கும் பிற மொழி பேசும் மக்களுக்கும் எதிரானதாக இருக்கின்றது எனவே அரசியலமைப்புச்சட்டம் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருக்கும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.