தினமும் இத்தனை லட்சம் பேருக்கு பரிசோதனையா?

0
65

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இங்கிலாந்தில், தினமும் 28,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளொன்றுக்கு 4 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் புதிய பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்து வரும் இங்கிலாந்து அரசு, உமிழ்நீர் மூலம் கொரோனா பாதிப்பை உடனடியாக உறுதிபடுத்தும் பரிசோதனை கருவியை வடிவமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஐரோப்பாவில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்துள்ள இங்கிலாந்தில், பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

author avatar
Parthipan K