இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

0
104
Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!
Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

இலங்கை தொடர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்பொழுது அங்கு நாடு முழுவதும் போராட்ட களமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு பிரதமர் தான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறி மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தவகையில் மகிந்த ராஜபக்சே ஆரம்ப கட்ட காலத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாள் செல்ல செல்ல பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே போராட்டமும் வெடிக்கத் தொடங்கியது. ஓர் பக்கம் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

அதேபோல மறுபக்கம் பிரதமர் பதவி விலகக் கூடாது என்று ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் அதிகரிக்க தொடங்கியதால் மகிந்த ராஜபட்சே பதவி விலகுவதாக தகவல்கள் வெளிவந்தது. கடந்த திங்கட்கிழமை பதவி விலகப் போவதாக தகவல்கள் வெளிவந்த உடனே நாட்டில் ஆங்காங்கே போராட்டம் வெடிக்கத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தை எதிர்த்து போராடி வந்த மக்கள் மீது பிரதமரை ஆதரித்த போராட்டக்காரர்கள் தாக்கத் தொடங்கினர். இருவருக்கு இடையே மோதல் அதிகரித்தது. இவ்வாறு இருக்கையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

பதவி விலகியும் அவரது வீடு உட்பட்ட பலவற்றையும் மக்கள் தீவைத்து தாக்கினர். அந்த வரிசையில் அவரது சகோதரர் வீட்டிற்கும் மக்கள் தீ வைத்தனர். இலங்கை முழுவதும் போராட்ட களமாக காணப்படுகிறது. மக்களிடம் இருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல உள்ளதாகவும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் தற்பொழுது கடற்படை தளபதி வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறியுள்ளனர். அதனால் மக்கள் கடற்படை தளபதி வீட்டை சூழ்ந்து முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த இலங்கை தற்பொழுது ராணுவ படையை இறக்கியுள்ளது.

போராட்டக்காரர்கள் காரணமின்றி பொதுமக்கள் மற்றும் இதர மக்களை தாக்குதல் செய்தால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று ராணுவ படையை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று ராணுவ படை தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து ராணுவப்படை அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. வெளியுறவுத் துறை, இது தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் இருந்து மீள்வதற்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.